நடிகர் ஜெய் ஆகாஷ் ஆபாசமாக திட்டினார் என்று படப்பிடிப்பில் கோபித்துக் கொண்டு வெளியேறினார் நிக்கோல். அடடா என்ன அழகு படம் நிக்கோலின் கவர்ச்சியை நம்பியே உருவாகி வருகிறது. அவர் படப்பிடிப்பிலிருந்து வெளிநடப்பு செய்தால்...?
பதறிப்போன தயாரிப்பாளர் எம்.வி. ராமசாமி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணையுடன் நிக்கோலுடன் சமாதானம் பேசினார். நிக்கோலுக்கும் இது முதல் படம். இது வெளிவந்தால் மட்டுமே சின்ன நமிதா என்று பெயர் வாங்க முடியும். (நமிதா போல் கிளாமர் நடிகையாக வரவேண்டும் என்பது நிக்கோலின் ஆசை).
ஜெய் ஆகாஷ் அடக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்ற உறுதிமொழி வாங்கி, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார் நிக்கோல்.
உண்மையில் நிக்கோலுக்கு பரந்த மனசுதான்!