பழனி, பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியிருக்கிறது வில்லு டீம். விரைவில் கேரளா அதிரம்பள்ளிக்கு செல்லவிருக்கிறார்களாம்.
இயற்கை எழில் சூழ்ந்த அதிரம்பள்ளி அருவியில் பாடல் காட்சி ஒன்றை எடுப்பதாக திட்டம். நயன்தாராவை நனையவிட்டு ரசிகர்களை 'ஹீட்'டாக்கும் இந்த 'கிக்' திட்டம் முன்பு வில்லுவின் ப்ராஜெக்டில் இல்லை.
குசேலன், சத்யம் படட்ஙகளில் நயன்தாரா கடைவிரித்திருக்கும் கிளாமரில் கிலியாகி, நாம் பின்தங்கிவிடக் கூடாதே என்ற எச்சரிக்கையில், பிறகு சேர்த்துக் கொள்ளப்பட்டதாம் இந்தப் பாடல் காட்சி.
வில்லுவை ஜில்லாக்கும் இந்த முயற்சியை வேண்டாமென்றா சொல்லப் போகிறார்கள் ரசிகர்கள்!