Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தயாரிப்பாளர்களுக்கு நிலம் - முதல்வர் முடிவு?

Advertiesment
தயாரிப்பாளர்களுக்கு நிலம் - முதல்வர் முடிவு?
, வியாழன், 17 ஜூலை 2008 (20:22 IST)
ராம. நாராயணன் தலைமையிலான முன்னேற்ற அணி, தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வில் வெற்றி பெற்றதும் செய்த முதல் வேலை, தமிழக முதல்வரை சந்தித்தது.

முன்னேற்ற அணியின் வெற்றியில் அகமழிந்த முதல்வரிடம், நலிந்த தயாரிப்பாளர்களுக்கு இலவச நிலம் வேண்டும் என கோரிக்கை வைத்ததாம் புதிய நிர்வாகக் குழு. கலையுலகம் என்றால் கனிந்துவிடும் முதல்வரும், பார்க்கலாம் என சாதகமாக தலையசைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த செய்தி வெளியானதும் சிலரின் பிபி எகிறியிருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்ல, கலையுலகினர் அனைவருக்கும் நிலம் வேண்டும் என இப்போதே போராட்டத்துக்கு வடிவம் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

விவசாயிகளுக்கு சொன்னபடி இரண்டு ஏக்கர் நிலம் வழங்கவில்லை. அப்படியிருக்க சினிமாக்காரர்களுக்கு இலவச நிலமா என அரசியலிலும் புகைச்சல்.

நடக்காத விஷயத்திற்கு இத்தனை நச்சரிப்பா என அலுத்துக் கொள்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil