சூப்பர் ஸ்டார்... அவர் இல்லை என்றால் சுப்ரீம் ஸ்டார்! வேறொன்றுமில்லை. இயக்குனர் ஹரி ரஜினிக்காக உருவாக்கிய கதை ஐயா. ரஜினி முடியாது என்று மறுக்க, ஐயாவில் சரத்குமார் நடித்தார்.
அதேபோல் ரஜினி மறுத்த இன்னொரு படம், ஜக்குபாய். கே.எஸ். ரவிக்குமார் இயக்கும் ஜக்குபாயில் இப்போது நடிப்பது சரத்குமார்.
ராடன் அலுவலகத்தில் மூன்று மாதங்கள் நடந்த கதை விவாதம் முடிந்துவிட்டது. படத்தில் ஸ்ரேயாவுக்கு அம்மாவாக நடிக்க முன்னணி நடிகை தேவை. அவர் கிடைத்து விட்டால் ஜக்குபாயை தொடங்கிவிடலாம்.
படத்தை குறித்து இன்னொரு தகவல். எல்லோரும் சொல்வதுபோல் ஜக்குபாய் இந்திப் படத்தின் தழுவல் இல்லையாம். ஜப்பான் திரைப்படம் ஒன்றின் அப்பட்டமான காப்பியாம். கதை விவாதத்தில் கசிந்த உண்மை தகவல் இது.