ஜனா, வாஞ்சிநாதன், படங்களுக்குப் பிறகு ஷாஜி கைலாஷ் இயக்கும் படம் எல்லாம் அவன் செயல்.
முதல் இரண்டு படங்கள் சரியாகப் போகாததால், கொஞ்சம் உஷாராக இந்த முறை செயல்படுகிறார். மலையாளத்தில் இவர் இயக்கத்தில் வெற்றிப் பெற்ற சிந்தாமணி கொல கேஸ் படமே. தமிழில் எல்லாம் அவன் செயலாக ரீ-மேக்காகிறது.
படத்தின் கதை நீதிமன்றத்தையும், கிரிமினல் வழக்கறிஞர் ஒருவரையும் பின்னணியாகக் கொண்டது. சுவாரஸ்யமான திருப்பங்கள் கொண்ட கதையென்பதால் இதனை இந்தியில் ரீ-மேக் செய்கிறார் இயக்குனர் கே.எஸ். அதியமான்.
மலையாளத்தில் சுரேஷ்கோபி நடித்த வேடத்தை இந்தியில் செய்பவர் சன்னி தியோல். இந்தியில் படத்தின் பெயர் ஜட்ஜ்மெண்ட்.
இந்திய சினிமாவின் கதை பஞ்சாயத்திற்கு இது சின்ன உதாரணம்.