ரஜினியை வைத்து எடுக்கப்படும் "சுல்தான் தி வாரியர்" அனிமேஷன் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார் இலியானா. ரஜினி மகள் செளந்தர்யாவின் ஆக்கர் ஸ்டூடியோ ஆட்லேப்ஸுடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது. இயக்கம் செளந்தர்யா.
சுல்தான் தி வாரியாரில் ரஜினிக்கு ஜோடி உண்டு. காதல், டூயட், எல்லாம் உண்டு. ரஜினி ஜோடியை யார் சாயலும் இல்லாமல் அனிமேஷனில் உருவாக்க இருப்பதாக முன்பு தெரிவித்தார் செளந்தர்யா. தற்போது அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் நடிகை இலியானாவை சந்தித்த செளந்தர்யா, ரஜினி ஜோடியாக நடிக்க அவரிடம் கேட்டுள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார். இலியானாவை வைத்து காட்சிகள் எடுக்கப்பட்ட பின், அவை அனிமேஷனாக மாற்றப்படும்.
ஒரு நடிகையை அனிமேஷன் படத்தில் பயன்படுத்துவது இந்தியாவில் இதுவே முதன்முறை.