புகழின் உச்சியில் இருக்கும் போது அதனை உதற தைரியம் வேண்டும். கோபிகாவுக்கு அது நிறையவே இருக்கிறது.
தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் துணிச்சலாக எடுத்த முடிவு திருமணம். மணமகன் அஜிலேஷ் அயர்லாந்தில் மருத்துவராக இருக்கும் மலையாளி.
மே 22-ல் நிச்சயதார்த்தம், ஜுலை 13ல் மணமக்கள் சம்மதம் கேட்கும் நிகழ்ச்சி. தடபுடலாக நடந்த இந்த இரு சடங்குகளைத் தொடர்ந்து இன்று திருமணம்.
எர்ணாகுளம் கோதமங்கலம் மார்த்தோம்மா ஆலயம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இங்கு நடிகை எனும் அடையாளத்தை களைந்து திருமதி. அஜிலேஷாக மாறுகிறார் கோபிகா.
வெள்ளித்திரைக்கு இழப்புதான் என்றாலும், கோபிகா எடுத்தது நல்ல முடிவு. வாழ்த்துவோம்!