கடவுளையே பஞ்சாயத்தில் கொண்டு நிறுத்தியிருக்கிறார் பாலா. பட்ஜெட்டை மீறி செலவு செய்ததால் வந்த வரவு இது.
பாலா நான் கடவுளை தொடங்கும் முன் கூறிய பட்ஜெட் மூன்றரை கோடி. படத்தை தொடங்கியதும் அது ஏழு கோடியாக உயர, தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டது ராஜலட்சுமி ஃபிலிம்ஸ். பிறகு ஏழு கோடிக்கு முதல் காப்பி அடிப்படையில் படத்தை தயாரிக்க ஒப்புக் கொண்டது பிரமிட் சாய்மீரா.
பாலா படத்தை இழைத்ததிலும் ஜவ்வாக இழுத்ததிலும் பிரமிட் சாய்மீரா கொடுத்த ஏழு கோடியும் எழுபது சதவீத படத்திலேயே கரைந்தது. பிறகு கடன் வாங்கி படத்தை முடித்ததில் எக்ஸ்ட்ரா செலவு எட்டு கோடி என மொத்தம் பதினைந்து கோடிக்கு கணக்கு காட்டுகிறார் பாலா.
பிதாமகன் படம் பன்னிரெண்டு கோடிக்கு விலைபோனது. நான் கடவுள் பதினைந்து கோடிக்கும் மேலேயே விற்பனையாகும். அதனால் பிரமிட் சாய்மீராவை பாலா கழுற்றிவிடுவார் என அனுபவஸ்தர்கள் சொன்ன ஜோஸியம் இப்போது பலித்துள்ளது.
ஏழுகோடி போக மேலும் எட்டு கோடி தந்தால் படத்தை சாய்மீராவுக்கு தரத்தயார் என தயாரிப்பாளர்கள் சங்கம் சென்றுள்ளார் பாலா. பேசிய ஏழு கோடிக்கு பைசா பெயராது என்கிறது பிரமிட் சாய்மீரா.
பஞ்சாயத்தின் தீர்ப்புக்காக கடவுள் காத்திருக்கிறார்.