நடிகன் என்பதன் அர்த்தத்தை முழுமையாக புரிந்து கொண்ட சிலரில் பிருத்விராஜும் ஒருவர். வில்லன், ஹீரோ என்று நடிப்பை தரம்பிரிக்கும் ஜாதியில்லை இவர். தமிழில் அறிமுகமானது வில்லனாக என்றாலும் இப்போது இவர் அனைவரும் விரும்பும் மென்மையான ஹீரோ!
இந்த நிலையில் வில்லன் வேடம் வந்தால் ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்கள் எப்படியோ, பிருத்விராஜ் ஆர்வமாக ஒப்புக் கொண்டு ஆச்சரியப்படுத்துகிறார். மணிரத்னத்தின் புதிய படத்தில் இவரே வில்லன்.
கதை கேட்கும்போது ஒரேயொரு நிபந்தனை மட்டும் விதிக்கிறார் இவர். அது, நானே டப்பிங் பேசுவேன்! தனது நடிப்புக்கு வேறொருவர் குரல் கொடுப்பதை அணு ஒப்பந்தத்தை எதிர்க்கும் இடதுசாரிகள் அளவுக்கு எதிர்க்கிறார்.
மணிரத்னம் படத்திலும் இவர் சொந்தக் குரலில் பேசுகிறார் என்பது கூடுதல் செய்தி.