Publish Date: Wed, 16 Jul 2008 (19:03 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:00 IST)
சுசி. கணேசனின் கந்தசாமி படப்பிடிப்பு வருகிற 23 ஆம் தேதி முதல் ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடக்கிறது.
விக்ரம், ஸ்ரேயா, நடிக்கும் கந்தசாமி ஏராளமான பொருட்செலவில் தயாராகி வருகிறது. தயாரிப்பாளர் தாணு இதனை தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்து வருகிறார். தெலுங்கில் படத்தின் பெயர் மல்லன்னா.
மெக்சிகோவில் விக்ரம், ஸ்ரேயா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெறுகிறது. வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட படம் அடுத்த வருடமே திரைக்கு வருகிறது.