முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, சுப்ரமணிபுரம் இரண்டும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்கள். எதிர்பார்ப்பை முனியாண்டி முழுமையாக நிறைவேற்றவில்லை. இப்போதே பல திரையரங்குகள் காற்று வாங்குகின்றன.
இதற்கு மாறாக சுப்ரமணியபுரத்திற்கு நல்ல வரவேற்பு. சென்னைக்கு வெளியேயும் படம் பிக்-அப் ஆகியுள்ளதாக வினியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னைய பொறுத்தவரை சென்றவார இறுதி வசூலில் சுப்ரமணியபுரத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது பரத் படம். முனியாண்டியின் வார இறுதி வசூல் 7.8 லட்சங்கள். மொத்த வசூலில் 23 லட்சங்கள்.
பழகிய முகங்கள் எதுவும் இல்லாத சுப்ரமணியபுரத்தின் வார இறுதி வசூல் 5.2 லட்சங்கள். மொத்த வசூல் 17 லட்சங்கள்.
சென்னை பாக்ஸ் ஆபிஸில் தசாவதாரத்திற்கு தொடர்ந்து முதலிடம். சென்றவார வசூல் மட்டும் 51.7 லட்சங்கள். 31 நாள் முடிவில் சென்னையில் மட்டும் மொத்த வசூல் 7.53 கோடிகள்!