Entertainment Film Featuresorarticles 0807 15 1080715089_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜயலட்சுமி - நிறைவேறிய கனவு!

Advertiesment
விஜயலட்சுமி அஞ்சாதே
, செவ்வாய், 15 ஜூலை 2008 (19:50 IST)
அகத்தியன் மகள் விஜயலட்சுமியின் முதல் படம் சென்னை 600 028. படத்தில் இவரே நாயகி. பேசிய ஒரே வசனம் அண்ணா!

அஞ்சாதேயில் அப்படியே. அதிகமும் கண்களால் பேசும் வேடம். கிளாமர் என்று சொல்வதற்கு இடமில்லாத இழுத்துப் போர்த்திய கேரக்டர்.

முதலிரண்டு படங்களிலும் அறியாயத்துக்கு தயிர் சாத கேரக்டர் என்பதால், இனி நடிப்பதென்றால் கிளாமர் வேடம்தான் என உறுதிகொண்டிருந்தார். மாடர்ன் உடையில் சொந்தமாக ஃபோட்டோசெஷன் நடத்தி பத்திரிகைகளுக்கு புகைப்படங்கள் தந்தார்.

அவரது முயற்சிக்கு நல்ல பலன். சென்னை 600 028 ஹீரோ ஜெய்யுடன் இவர் நடிக்கும் அதே நேரம் அதே இடம் படத்தில் கல்லூரி மாணவி வேடம். கிளாமருக்கு ஸ்கோப் உள்ள கேரக்டர்.

கூட்டுப் புழு பருவத்தை தாண்டி பட்டாம்பூச்சியாக சிறகடிக்கும் பரவசத்தில் உள்ளார் விஜயலட்சுமி.

Share this Story:

Follow Webdunia tamil