பந்தயம் படத்திற்காக ரீ-மிக்ஸ் ஒன்றை போட்டுள்ளார் விஜய் ஆண்டனி. டைலமோ, நாக்க முக்க என புரியாத மொழியில் பாடல் அமைத்து தமிழர்களை பரவசப்படுத்தி வரும் விஜய் ஆண்டனியின் இந்த ரீ-மிக்ஸ் வித்தியாசமானது.
சின்ன மாமியே உன் செல்ல மகளெங்கே என தொடங்கும் இலங்கையின் பாப்புலர் பாப் பாடலை தனது ரீ-மிக்ஸ¤க்கு இவர் தேர்வு செய்துள்ளார். பாடலின் சரணம் சென்சாரின் கத்திரிக்கு இரையாகும் என்பதால் சரணத்தை மட்டும் சிறிது சைவமாக மாற்றியுள்ளனர். மற்றபடி பல்லவி பாடலின் டியூன் அனைத்தும் அப்படியே.
எஸ்.ஏ.சி.யின் படத்தில் கிளாமர் ஒரு சிட்டிகை அதிகமிருக்கும். பந்தயம் ட்ரெய்லர் பார்த்தவர்களின் கமெண்ட், சிட்டகை அல்ல பல கிலோ அதிகம்! இதில் சின்ன மாமி ரீ-மிக்ஸ். எஸ்.ஏ.சி.க்கு இளமை திரும்பிக் கொண்டிருக்கிறது.