Publish Date: Tue, 15 Jul 2008 (19:35 IST)
Updated Date: Tue, 15 Jul 2008 (19:35 IST)
பரட்டை என்கிற அழகு சுந்தரத்திற்குப் பிறகு சுரேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் ஆறுமுகம். பரத், ப்ரியாமணி நடிக்கும் ஆறுமுகத்தின் திரைக்கதை வசனம் தயார். ரம்யா கிருஷ்ணன் பிரதான வேடத்தில் நடிக்கிறார்.
சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்த ரம்யா கிருஷ்ணன் ஆறுமுகத்தில் நடிக்க முக்கிய காரணம், படத்தில் அவரது கேரக்டர். படையப்பாவுக்கு சற்றும் குறையாக வில்லி வேடம்.
நகரம் சார்ந்த கதை ஆறுமுகம். முழுக்க சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்த உள்ளனர். சென்னை ·பிலிம் சிட்டியில் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
கூல் புரொடக்சன் தயாரிப்பான ஆறுமுகம், ஆடி முடிந்து ஆவணி தொடங்குவதற்காக காத்திருக்கிறது. ஆவணி தொடங்கியதும் படப்பிடிப்பு தொடங்கிவிடும்.
பரத், ப்ரியாமணி வைத்து ஃபோட்டோ செஷனை நடத்தி முடித்துள்ளார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.