Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பற்றிக்கொள்ளப் போகும் பட விளம்பர விவகாரம்!

Advertiesment
ராஜாதிராஜா ராகவா லாரன்ஸ் சிகரெட்டு
, திங்கள், 14 ஜூலை 2008 (20:20 IST)
இன்று பட்டாபிஷேகம் என்ற அறிவிப்போடு தினசரிகளில் வந்துள்ள அந்த சினிமா விளம்பரம் இன்னும் ஓரிரு நாட்களில் தலைப்பு செய்தி ஆகலாம்.

இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தயாரித்த இயக்கும் 'ராஜாதிராஜா' படத்தின் விளம்பரத்தில் ராகவா லாரன்ஸ் குளோசப்பில் முறைக்கிறார். முறைப்பதில் ஒன்னும் பிரச்சனையில்லை. வாயில் புகையோடு தொடங்கு இரண்டு சிகரெட்டுகள்தான் விவகாரத்தை பற்றியெரிய வைக்கப் போகிறது.

ஒரு சிகரெட் குடிப்பதற்கு கூட பயந்துபோய் இனிமேல் தமது படங்களில் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்கமாட்டேன் என்று ஆனானப்பட்ட ஸ்டார்கள் எல்லாம் சூயிங்கம் போட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியிருக்க இந்த இரட்டை சிகரெட் விளம்பரம் மட்டும் விவகாரம் ஆகாமல் போகுமா?

அக்டோபர் 2 ஆம் தேதியிலிருந்து வீட்டுக்குள் கூட புகைபிடிக்கக்கூடாது என்று அறிவித்துள்ள அன்புமணி தரப்புக்கு இந்தப்பட விளம்பரம் இலக்காகப் போவது உறுதி.

Share this Story:

Follow Webdunia tamil