இயக்குநர் விஜய் கிரீடத்தைத் தொடர்ந்து இயக்கும் படம் பொய் சொல்லப் போறோம். மலையாள இசையமைப்பாளர் எம்.ஜி.ஸ்ரீகுமார் இசையமைக்கிறார். படத்தில் தனியாகப் பாடல்கள் இருக்காதாம். கதையோட்டத்தில் காட்சிகளின் பின்னணியில்தான் பாடல்கள் இடம்பெறுமாம்.
வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் விஜய், 'என்னிடம் சண்டை இல்லாமல் படம் எடுக்கிறீர்களே என்கிறார்கள். சண்டையும் பாட்டும் இல்லாமல் படம் எடுக்க முடியாதா. இல்லை எடுக்கக் கூடாதா. என்னதான் நான் எழுதிட இயக்கினாலும் அதை பிரிதர்ஷனின் வழிகாட்டுதலோடுதான் படமாக்கியுள்ளேன்.' என்று குறிப்பிட்டார்.
விழாவில் இயக்குநர் பிரியதர்ஷன், நாசர், ஷாம், நடிகைகள் பிரீத்தி, சரண்யா, பாடலாசியர் நா.முத்துகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.