பருத்தி வீரனில் சித்தப்பு கேரக்டரில் வெளுத்துக் கட்டிய சரவணனுக்கு குணசித்திர வேடத்தில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகிறதாம். கதையும், தனது கேரக்டரும் திருப்தியளிக்கும் படத்தை மட்டுமே சரவணன் ஒப்புக்கொள்கிறாராம்.
இப்போது வி.ஹரி இயக்கும் கருப்பன் படத்தில் 55 வயது நிரம்பிய கேரக்டரில் சரவணன் நடிக்கிறார். புது முகம் ஆதிசுந்தர், ஷேரின், ஹாசினி, ரியாஸ்கான், நிரோஷா, நடிக்கின்றனர். கே.ஆர்.லட்சுமி ராஜ் ஒளிப்பதிவு.
ஆதித்யன் இசையமைப்பில் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். ஆரஞ்சு கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்கும் கருப்பன் பட இயக்குநர் வி.ஹரி, பழம்பெரும் நடிகை என்.எஸ்.லட்சுமியின் பேரன்.