முன்பெல்லாம் கதைக்குச் சம்பந்தம் இருந்தால்தான் வெளிநாட்டிற்குச் சென்று சூட்டிங் நடத்துவார்கள். பிறகு அது கொஞ்சம் மாறி ஒருசில பாடல்களை வெளிநாடுகளில் படமாக்கி வந்தார்கள். இப்போது மொத்த சூட்டிங்கையுமே வெளிநாட்டில் நடத்தி விடுகிறார்கள்.
தஞ்சாவூர் சுப்பன் கதையாக இருந்தாலும், மதுரை மாயாண்டி கதையாக இருந்தாலும் சூட்டிங் நடப்பது இத்தாலி, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியாவில்தான். கனவு, பாட்டு, பிளாஷ்பேக் என்று தயாரிப்பாளர்களின் துட்டை வாணவேடிக்கை ஆக்கிவிடுகிறார்கள்.
இப்போது தயாரிப்பில் உள்ள படங்களில் கமலின் மர்மயோகி, சரத்குமாரின் ஜக்குபாய், பிரசன்னாவின் அச்சமுண்டு அச்சமுண்டு, விஜயின் வில்லு என எல்லா படக்குழுவினரும் அயல்நாடுகளில்தான் டேரா போடுகின்றனர்.
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரப்போகிறது. அதுக்கு எதுக்கு லண்டன், இத்தாலி இத்யாதி, இத்யாதி...