சென்னையில் நடந்த தமிழ் இசை விருது விழாவில் ஸ்ருதி கமல் முதன் முதலாக மேடையேறினார். இவ்விழாவில் விஜய், நயன்தாரா, பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மான், குஷ்பு என ஒரு நட்சத்திரப் பட்டாளமே கூடியிருந்தது.
விழாவின் சிறப்பாகப் பேசப்பட்டது ஸ்ருதி கமலின் பாட்டுத்தான். கறுப்பு உடையில் ஒரு தேவதை போல மேடையேறிய ஸ்ருதி, கீ போர்ட் வாசிப்போடு ஒரு பாப் சாங் பாடினார். பின்னர் 'காசு மேல காசு வந்து' பாடி கலகலக்க வைத்தார்.
கடைசியில் 'யார் யார் சிவம்' என்ற 'அன்பே சிவம்' பாடலைப் பாடத் தொடங்கியதும் அரங்கமே அமைதியில் ஆழ்ந்தது. விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துவிற்கு அறிவிக்கப்பட்டதும், அடுத்தபடியாக சிறந்த பெண் பாடலாசிரியருக்கான விருது நடிகை ரோகிணிக்கு அறிவிக்கப்பட்டது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
'பச்சைக்கிளி முத்துச்சரத்தில்' ரோகினி எழுதிய 'உனக்குள் நானே' பாடலுக்குத்தான் இந்தப் பரிசி என்று தொடர்ந்து அறிவித்தபோது அரங்கமே அப்ளாசில் அதிர்ந்தது.