Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இணையதளம் தொடங்கியுள்ள ரேவதி!

Advertiesment
இணையதளம் தொடங்கியுள்ள ரேவதி!
, வெள்ளி, 11 ஜூலை 2008 (20:18 IST)
நடிகை ரேவதி 'ஃபேஷன் ஃபார் சினிமா' என்ற பெயரில் புதிதாக இணையதளம் ஒன்றை தொடங்கியுள்ளார். நடிக்க வந்தோமா நாலு காசு பார்த்தோமா என்ற நடிகைகளின் மத்தியில் வித்தியாசமானவர் ரேவதி.

'பேனியன்' என்ற அமைப்பின் மூலம் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவது, பெண்களின் உரிமைகள் குறித்தான விஷயங்களுக்க குரல் கொடுப்பது என பொதுநல நோக்கோடு பணிபுரிபவர்.

இப்போது தான் தொடங்கியுள்ள இணையதளம் மூலம் பெண் சுதந்திரம் பற்றிய கட்டுரைகளையும், ஆக்கப்பூர்வமாக பெண்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பெண்களின் இன்றைய நிலை என்னவாக இருக்கும் என்பது பற்றியும் கட்டுரைகளாக எழுதப் போகிறாராம்.

கால்ஷீட் காலியானவுடன் அமெரிக்க டாக்டர்களை மணந்து டாட்டா காட்டும் நடிகைகளுக்கு மத்தியில் ரேவதி நிச்சயம் ஒரு புதுமைப் பெண்தான்.

Share this Story:

Follow Webdunia tamil