''கனவுகளை நிறைவு செய்பவள்'' என்று அர்த்தம் கொடுக்கும் 'அனோஸ்கர்' என்ற பெயரை தன் மகளுக்கு சூட்டியிருக்கிறார் அஜீத். தங்கள் 'தலை'யின் மகள் படத்தை பத்திரிகைகளில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் அஜீத் ரசிகர்களிடம் உண்டு.
அதை நிறைவு செய்யும் வகையில் அஜீத்- ஷாலினி தம்பதி தங்கள் வாரிசோடு ஒரு நடன நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளனர். தங்கள் மகளை ஒரு சாதாரண குடும்பத்துப் பெண்ணைப் போல் வளர்க்கவே பிரியப்படுகிறார்களாம்.
மீடியா வெளிச்சம் விழுந்தால் தான் பிரபலங்களின் வாரிசு என்ற எண்ணம் அனோஸ்கா மனதில் வந்து விடும். இயல்பாக வளர்க்க பிரியப்பட்டே இதுவரைக்கும் பத்திரிகை, மீடியாக்களுக்கு புகைப்படம் தரவில்லை என்று அடக்கத்துடன் சொல்லியுள்ளனர் அஜீத்- ஷாலினி தம்பதி.
விழா முடியும் வரையில் சமர்த்தாக தந்தையிடம் அமர்ந்திருந்தாள் அனோஸ்கா. எத்தனை உயரத்துக்கு வந்தாலும் வாழ்க்கை முறையில் எளிமையை கடைபிடிக்கும் அஜீத் 'தல' தான் என்பதில் சந்தேகமில்லை.