ஒரு கதை, ஒரு கதாநாயகன், ஒரு வில்லன் என்று படம் எடுக்கும்போதே நமக்கு தலைசுற்றல் வருகிறது. லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் 'ராஜாதி ராஜா' படத்துக்கு 6 கதாநாயகிகளும் 6 வில்லன்களும் நடிக்கிறார்களாம்.
ஷக்தி சிதம்பரம் கோவை பிரதர்ஸ், பழனி, சன்ட படங்களுக்கு பின் ராஜாதிராஜாவில் இந்த விஷப்பரிட்சைக்கு தயாராகியுள்ளார். தினா இசையமைக்க, சுரேஷ் தேவன் ஒளிப்பதிவு செய்ய, பேரரசு பாடல்கள் எழுத கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷக்தி சிதம்பரம் இயக்கப் போகிறார்.
காமெடிக்காக கருணாஸ் முக்கிய வேடமெற்கிறாராம். ராஜாவுக்கு செக் வைக்க ஆள் உண்டு. இந்த ராஜாதிராஜாவுக்கு செக் வைக்க யார் உண்டு? என்பது தான் கதையின் கருவாம்.
புதுமையாக படம் பண்றதுக்கு ஒரு அளவில்லையா? இன்னும் என்னவெல்லாம் புதுமையை தமிழ்பட உலகம் சந்திக்கப் போகிறதோ!