Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குணசேகர் இயக்கத்தில் விஷால்!

Advertiesment
குணசேகர் இயக்கத்தில் விஷால்!
, வெள்ளி, 11 ஜூலை 2008 (14:31 IST)
'ஒக்கடு' படத்தின் மூலம் தெலுங்கில் பேசப்ப‌ட்டவர் இயக்குநர் குணசேகர். குணசேகரின் அடுத்த படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதனால் உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் விஷால் அடுத்த படம் நடிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்புகள் காலதாமதமாக வாய்ப்பிருக்கிறது. சத்யம் படப்பிடிப்பு முடிந்த பின்பு தனய்யா தயாரிப்பில் விஷால் தெலுங்கில் பிரவேசம் செய்வது உறுதியாகிவிட்டது.

தான் இதுவரை நடித்த அனைத்து படங்களுமே தெலுங்கில் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பு பெற்றதும், தெலுங்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதுமே விஷாலின் இந்த முடிவுக்கு காரணம் என்கிறார்கள்.

விஷாலின் உடலமைப்பு, முகபாவம், பாவனைகள், ஆக்சன் இவை தமிழை விட தெலுங்கில் நன்றாக அமைந்தால் இனி தெலுங்கிலிருந்து அவர் படத்தை தமிழில் டப் செய்ய வேண்டிய நிலை வந்தாலும் வரலாம். யார் கண்டது?

Share this Story:

Follow Webdunia tamil