வருடக் கணக்கில் படம் எடுக்கும் இயக்குநர்கள் நம் தமிழ்த் திரையுலகில் உண்டு. கமல், பாலா, ஷங்கர், அமீர் என நீளும் இப்பட்டியலில் இயக்குநர் கலாபிரவுவையும் சேர்த்துவிடலாம்.
இவர் இயக்கி வெளிவர இருக்கும் 'சர்க்கரை கட்டி' படத்தில் ஒரு பாடலுக்கு 13 மாதங்களாய் கிராஃபிக்ஸ் பண்ணியுள்ளார்களாம்.
பாக்யராஜ் மகள் சாந்தனு ஹீரோவாக, வேதிகா ஹீரோயினாக நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரஹ்மானின் மியூசிக்கிற்காக பல மாதங்கள் காத்திருந்து, இசைப் புயலின் இசையமைப்பில்தான் படம் வரவேண்டும் என்ற தீர்மானத்தில் இருந்து கலாபிரபு சற்றும் பின்வாங்கவில்லையாம்.
இயக்குநரின் அன்பான காத்திருப்புக்கு நன்றி சொல்லும் விதமாய் ரஹ்மானும் புத்தம் புது பாடல்களாய் பொளந்து கட்டியுள்ளாராம். சாந்தனுவும் இஷிதாவும் வரும் "ஜலக்கு ஜலக்கு உன் நெஞ்சில்" என்ற ஒரு பாடலுக்குத்தான் 13 மாத கிராஃபிக்ஸ் ஒர்க் நடந்தேறியுள்ளது.
இந்தப் பாட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைக்கிற அளவுக்கு உள்ளதாம். பாட்டு மாதிரியே படமும் பிரமாதமாக வந்தால் சரி.