"ஆடின காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது" என்பது பழமொழி. "இனி நான் ஆபாசமான காட்சிகளில் நடிக்கமாட்டேன், நடிப்பில் புது பரிமாணத்தைக் காட்டப்போறேன்" என்றெல்லாம் பேட்டிவிட்ட எஸ்.ஜே. சூர்யா, "பழைய குருடி கதவைத் திறடின்னு" ஆரம்பிச்சுட்டாராம்.
இவர் நடிக்கும் 'நியூட்டனின் மூன்றாம் விதி' படத்தில் கொஞ்சம் கொஞ்சமா சூர்யாத்தனங்களை சேர்க்கச் சொல்லி இம்சிக்கிறாராம்.
தயாரிப்பு தரப்பு எவ்வளவோ மன்றாடியும் இப்படி இருந்தா நல்லாருக்கும், அப்படியிருந்தா அருமையா இருக்கும்னு கிளுகிளு சமாச்சாரங்களை சேர்க்கச் சொல்லி அடம் பிடிக்கிறாராம்.
வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுவதை பார்த்துக் கையைப் பிசைகிறதாம் தயாரிப்பாளர் தரப்பு.