முத்துலட்சுமி மூவிஸ் சார்பில் தயாரித்து டி.பி. கஜேந்திரன் இயக்கும் படம் 'மகளே மருமகளே'. முழுநீளக் காமெடிப் படமான இதில் மிதுன், தேஜஸ்வி, நாசல், லிவிங்ஸ்டன், சரண்யா இவர்களுடன் இயக்குனர் டி.பி. கஜேந்திரனும் நடிக்கிறார்.
கலக்கும் காமெடி டிராக்கோடு விவேக்கும் படம் நெடிதும் வலம் வரப்போகிறார். விவேக்கின் ஜோடியாக யாமினி சர்மா. தினா இசையில், ராஜராஜன் ஒளிப்பதிவில், கிருஷ் டாவின்சியின் வசனத்தில் வெளிவரப்போகும் இப்படம், டி.பி. கஜேந்திரன் இயக்கப் போகும் 23வது படமாகும்.
மகளே மருமகளே படத்திற்கான பாடல்களை கங்கை அமரன், யுகபாரதி, சினேகன், டாக்டர் கிருதியா எழுதியுள்ளனர். அக்டோபர் வாக்கில் வெளிவரவுள்ள இப்படம் மூலம் கஜேந்திரன் காமெடியில் ஒரு வலம் வரப்போகிறாராம்.