Publish Date: Tue, 08 Jul 2008 (19:55 IST)
Updated Date: Tue, 08 Jul 2008 (19:55 IST)
'அனுமான் ஜங்ஷன்' தெலுங்குப் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ராஜா தெலுங்கில் தனது இரண்டாவது பட வேலைகளில் இறங்கியுள்ளார்.
தனது சொந்த நிறுவனம் எம்.எல். மூவி ஆர்ட்ஸ் மூலம் எபதி இயக்கவிருக்கும் தனது படத்துக்கு தெலுங்கு முன்னணி ஹீரோ பிரபாஸை கதாநாயகனாக்க முடிவு செய்துள்ளார்.
வர்ஷம், சத்ரபதி, புஜ்ஜிக்காடு படங்களின் மூலம் புகழ்பெற்றுள்ள பிரபாஸ் ராஜாவுக்கு தேதி கொடுத்து காத்திருக்கிறார். கதாநாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
சந்தோஷ் சுப்பிரமணியம் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த தமிழ்ப் படம் பண்ணுவதற்கான கதையும் ராஜாவின் கையில் ரெடிதானாம். ஆனாலும், தெலுங்குப் படமும் தொடங்கும் மனநிலையில் இருக்குநர் இருப்பதால் எந்த மொழிப் படம் முதலில் என்பதுதான் இன்னும் முடிவாகாத முடிவாம்.