சென்னையில் பதினைந்து திரையரங்குகளில், தமிழகம் முழுவதும் 200 திரையரங்குகளில், தமிழ் தெலுங்கில் ஒரே நாளில் ரிலீஸ், மொத்தம் 600 பிரிண்டுகள், அமெரிக்காவில் மட்டும் ஒரு நாள் முன்னதாக ரிலீஸ் என ஏகத்துக்கும் எதிர்பார்ப்புகளை கூட்டிக்கொண்டே போகிறான் குசேலன்.
ஏற்கனவே இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேலாக விற்றுத் தீர்ந்துள்ள பாடல் கேசட்டுகள், குசேலன் படைக்கப் போகும் சாதனைக்கு அடையாளமாய் கருதுகின்றனர் சினிமா உலகினர்.
பட்டாசு வெடிக்கக்கூடாது, பாலாபிஷேகம் செய்யக் கூடாது என ரஜினி தலைமை மன்றம் கட்டளையிட்டிருந்தாலும், ரசிகர்கள் தரப்போ கொடி, தோரணம், கட் அவுட்கள் என அசுரகதியில் இறங்கியுள்ளனர்.
சந்திரமுகி, சிவாஜி படங்களைக் காட்டிலும் 'குசேலன்' சாதனைகள் புரிய வாய்ப்புகள் அதிகமிருப்பதற்கான அறிகுறிகள் தென்படவே செய்கின்றன. ஆகஸ்ட் 1 ஆம் தேதி அந்த அறிகுறிகள் மெய்ப்பட்டுவிடும்.