இந்தியில் நானா படேகர் நடித்த படம் 'டாக்ஸி' மிகப்பெரிய அளவில் வசூல் செய்து சாதனைப் படைத்தது. விடுவார்களா நம் ஆட்கள். உடனே அதை தமிழில் இயக்க ஒரு பெரிய தொகை கொடுத்து வாங்கிவிட்டார்கள். அதற்கு தமிழில் வைத்த டைட்டில் தநா-07 அல-4777.
இதில் இரண்டு நாயகர்கள். ஒன்று பசுபதி, இன்னொருவர் அஞ்சாதே படத்தில் நடித்த அஜ்மல். நாயகி 'கருப்பாகி குத்தகைதாரர்' படத்தின் நடித்த மீனாட்சி. ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க சிம்ரனிடம் கேட்க, அவரும் ஒப்புக்கொண்டார்.
ஆக, இந்த கதையிலோ நடிகர்களிலோ எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் மறைந்த முதல்வர் எம்.ஜி. ஆரின் கார் எண்ணை படத்திற்கு பெயராக வைத்ததுதான் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி எம்.ஜி.ஆரின் கார் எண்ணை வைத்ததால் பொக்கிஷமாகக் கருதப்படும் காரை வாடகைக்கு சினிமாவில் கொடுத்திருப்பதாக சில எம்.ஜி.ஆர். விசுவாசிகள் குரல் எழுப்ப, அதை எப்படி தீர்ப்பது என்ற குழப்பத்தில் தவிக்கிறது டைரக்டர் மற்றும் தயாரிப்பு தரப்பில். இவர்களுக்கு வேறு வேலையே இல்லைபோல் இருக்கிறது.