Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வந்தா வா வராட்டி போ!

Advertiesment
வந்தா வா வராட்டி போ!
, திங்கள், 7 ஜூலை 2008 (19:54 IST)
மிகவும் சின்ன வயதில் இசையமைப்பாளர் ஆனவர் ஜி.வி. பிரகாஷ்குமார். குறைந்த அனுபவமே பெற்றாலும் கிசுகிசுவில் சிக்குவதில் பெரிய அளவுக்கு அனுபவப் பட்டிருக்கிறார் ஜி.வி.

சில மாதங்களுக்கு முன்னால் பின்னணிப் பாடகி ஷைந்தவியுடன் ஊர் சுற்றுகிறார் என்று ஊர் முழுக்கப் பேசப்பட்டது. அதற்குப் பின்னால் தொழிலில் அதிகம் கவனம் செலுத்தாமல் ஏனோதானோவென்று இருக்கிறார், கேட்ட நேரத்தில் பாடல்கள் முடித்துக் கொடுப்பதில்லை என்ற புகாரும் சொல்லப்பட்டது.

என்றாலும், சூப்பர் ஸ்டார் நடிக்கும் குசேலன் படத்திற்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். சினிமா வட்டாரத்தில் அதிகம் சாதிக்கவில்லை என்றாலும், அதிக அளவு சம்பளம் கேட்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர், அது உண்மைதான் என்று சமீபத்தில் நிரூபித்துள்ளார்.

ஒரு படத்துக்கு பேக்கேஜ் ஐம்பது லட்சம் கேட்டவர், 'குசேலன்' படத்துக்குப் பின்னால் ஒரு கோடி சம்பளம் என்று நிர்ணயித்து உள்ளார். இதைக்கேட்ட இயக்குனர்களும், இசையமைப்பாளர்களும் 'மெளத்' மீது விரலை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

காத்து உங்கப் பக்கம் அடிக்குது பிரகாஷ், தூத்துக்குங்க... தூத்துக்குங்க.

Share this Story:

Follow Webdunia tamil