கத்தாழ கண்ணால் குத்தி, இல்லாத இடுப்பில் இடித்து தமிழ்நாட்டின் இளசு முதல் பெரிசு வரை தூக்கத்தை கெடுத்தவர் ஸ்னிக்தா.
அவருக்கு நல்ல பேரும், மிஷ்கினின் தற்போதைய படமான 'நந்தலாலா'வில் ஹீரோயின் வாய்ப்பும் கிடைத்ததோடு இல்லாமல், அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த டான்ஸ் மாஸ்டர் தினாவுக்கும் நிறைய வாய்ப்புகள்.
'அஞ்சாதே' படத்திலேயே ஹீரோயினியாக கிடைத்திருக்க வேண்டிய வாய்ப்பு தள்ளிப்போனாலும், அவருக்கு நந்தலாலா வாய்ப்பு கிடைத்துவிட்டது. அந்தப் பாடலுக்குப் பின் நிறைய வாய்ப்பு வந்தும் 'நந்தலாலா' வெளியான பிறகே வேறு படங்களில் நடிக்க இருந்தேன்.
ஆனால், தற்போது ஷக்தி சிதம்பரம் இயக்கும் 'ராஜாதிராஜா' பட சான்ஸை மறுக்க முடியவில்லை. லாரன்ஸ்தான் ஹீரோ. அவரோட ரசிகை நான். அப்படியிருக்கையில் எதுவும் சொல்ல முடியாமல் ஒப்புக் கொண்டேன்.
படத்தில் என்னோடு மீனாட்சி, மும்தாஜ், சமிக்சா, கிரண், காம்னா என ஐந்து ஹீரோயின்கள். இவ்வளவு பேர் இருந்தாலும் அனைவருக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்று நம்புகிறார். இந்தப் படத்திலும் கத்தாழ கண்ணால குத்துவீர்களா ஸ்னிக்தா?