Publish Date: Mon, 07 Jul 2008 (17:29 IST)
Updated Date: Mon, 07 Jul 2008 (17:28 IST)
சுஜாதா சினிமாவில் விட்டுச் சென்ற இடம் காலியாக உள்ளது. எளிய கதை, ஈர்க்கும் திரைக்காளை, புன்முறுவல் வசனம், எதிர்பாராத திருப்பம்... இதுதான் சுஜாதா!
அவரது இடத்தை ஏகதேசமாக நிரப்புகிறவர் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். ஆல்பம், பாப்கார்ன்களின் மூலம் சினிமாவில் நுழைந்தவர், பாபா, சண்டக்கோழி, பீமா, உன்னாலே உன்னாலே என குறுகிய காலத்தில் நிறைய திரைப்படங்களுக்கு வசனம் எழுதினார். இவரது வசனத்தில் உருவான தாம்தூம் விரைவில் வெளிவர உள்ளது.
அஜித்தின் ஏகன், சரணின் மோதி விளையாடு படங்களின் கதை, வசனமும் இவரே. சுஜாதா இடத்தை நிரப்ப மணிரத்னம் தனது கதை விவாதங்களில் புதிதாக சேர்த்துக் கொண்டிருப்பதும் இவரைத்தான்.
கதாசிரியர் கிடைத்திருக்கிறார். நல்ல கதை கிடைக்கிறதா பார்ப்போம்!