Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சேரன் படத்தில் உதயதாரா!

Advertiesment
சேரன் படத்தில் உதயதாரா!
, திங்கள், 7 ஜூலை 2008 (17:23 IST)
தீ நகர் படத்தில் அறிமுகமான உதயதாராவை மறந்திருக்க மாட்டீர்கள். படம் முடிந்த பிறகும் என்னை தொந்தரவு செய்கிறார் என தீ நகர் இயக்குனர் திருமலை மீது புகார் வாசித்தாரே அதே உதயதாராதான்!

அவர் போட்ட போடில் திருமலை வேறொரு பெண்ணை திருமணம் செய்து சஃப்டி ஆகிவிட்டார். வேலியில் போறவரை வீணாக ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என உதயதாராவை யாரும் சீண்டவில்லை.

இந்நிலையில்தான் கேரள நாயகிகளின் ஆபத்பாந்தவரான சேரன் உதயதாராவை தனது ஆட்டோகிராஃப் இரண்டாம் பாகத்தில் ஒப்பந்தம் செய்திருப்பதாகப் பேச்சு.

சும்மாவே சேரனுடன் நடிக்கும் நாயகிகள் பற்றி நெருப்பில்லாமல் புகையும். உதயதாராவோ எப்போதும் கனன்று கொண்டிருக்கும் எரிமலை. புகைக்கு பதில் நெருப்பே வெளிவருமே என சேரனின் நலம் விரும்பிகள் கவலைப்படுகிறார்கள்.

சேரன் எச்சரிக்கை கொள்வது நல்லது!

Share this Story:

Follow Webdunia tamil