Entertainment Film Featuresorarticles 0807 05 1080705059_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைப்புச் செய்தியின் நயன்-சிம்பு!

Advertiesment
நயன்தாரா சிம்பு
, சனி, 5 ஜூலை 2008 (20:31 IST)
பிரிந்தவர் கூடினால் பேரின்பம்! அந்த இன்பத்தில் நீச்சலடித்துக் கொண்டிருக்கிறார்களாம் சிம்புவும், நயன்தாராவும், நம்ப முடிகிறதா?

நாம் விசாரித்ததில் கிடைத்த தகவல்களை கோர்த்தால் சுவாரஸ்யமான லவ் ஸ்டோரி தேறும்.

நயனும் சிம்புவும் பிரிந்த பிறகு, சிம்பு நயன்தாராவை பலமுறை சந்திக்க முயன்றார். ஒவ்வொரு முறையும் விழுப்புண்ணால் மனம் புண்பட்டாலும், பண்பட்டவர் போல் நயன்தாரா குறித்து தரக்குறைவாக எதுவும் பேசவில்லை சிம்பு. இதனால் நயன்தாராவின் மனதில் கசப்பை மீறி இனிப்பு தடவியிருக்கிறார் சிம்பு.

இந்நிலையில் த்ரிஷா, விஷால், நயன்தாரா மற்றும் இளம் நடிகர்கள் கலந்துகொண்ட பார்ட்டியில் திடீர் என்று சிம்புவும் வர, களைகட்டியிருக்கிறது பார்ட்டி. நடுவில் சிம்புவும், நயன்தாராவும் சக நடிகர்களால் சமரசம் செய்து வைக்கப்பட்டனராம். இருவரும் தனிமையில் மனம்விட்டு பேசிக் கொண்டதாகவும் கூறுகிறார்கள்.

பழைய நட்பை இருவரும் புதுப்பித்துக் கொண்ட சேதியை இருவருமே இதுவரை மறுக்கவில்லை. அதெப்படி மறுப்பார்கள் என்கிறார்கள் பார்ட்டியில் உடனிருந்தவர்கள்.

எப்படியோ மீண்டும் தலைப்புச் செய்தியாகியிருக்கிறது ‌சி‌ம்பு, நயன் ஜோடி!

Share this Story:

Follow Webdunia tamil