விஜயகாந்த் நடித்துவரும் எங்கள் ஆசான் திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை கலைஞர் டி.வி.யின் கதவுகளை தட்டியது. ஆனாலும் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை.
அரசியலை மீறி விஜயகாந்தின் அரசாங்கம் பட உரிமையை வாங்கியது கலைஞர் டி.வி.தான். அவர்கள் எங்கள் ஆசானை மறுக்க காரணம், படத்துக்கு வேல்யூ இல்லை என்று கருதியதுதானாம்!
விஜயகாந்த் படத்துக்கு நோ சொன்னவர்கள் குசேலனை விரும்பி வாங்கியிருக்கிறார்கள். தசாவதாரத்திற்கு கொடுத்ததைவிட குசேலனுக்கு ஐம்பது லட்சங்கள் அதிகம் என்கிறது ரகசிய தகவல் ஒன்று.
ரஜினி அல்லவா... இன்னும் அதிகமாகவே கொடுத்திருப்பார்கள்!