Entertainment Film Featuresorarticles 0807 05 1080705057_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குசேலன் பாடல்கள் சாதனை!

Advertiesment
குசேலன் பாடல்
, சனி, 5 ஜூலை 2008 (20:21 IST)
எதிர்பார்த்தது என்றாலும் ஒரே நாளில் இரண்டு லட்சம் குசேலன் ஆடியோ கேசட்டுகள் விற்பனையாகும் என்று யாரும் நினைக்கவில்லை. சந்தோஷத்தில் திக்குமுக்காடி போயுள்ளனர் ஆடியோ உரிமை வாங்கிய பிக் மியூஸிக் நிறுவனத்தார்.

சரி, குசேலன் பாடல்களில் ரசிகர்களுக்குப் பிடித்தது எது? இந்த கேள்வியை கேட்டால் எல்லாப் பாடல்களும் என்றுதான் பதில் வரும். சும்மாயில்லை எல்லாமே நல்லப் பாடல்கள்தான்.

சினிமா சினிமா பாடலில் ட்ராலி தள்ளுகிறவர்களிலிருந்து லைட் பாய் வரை அனைவரின் முக்கியத்துவத்தையும் வார்த்தைகளில் வடித்திருக்கிறார் வாலி.

சாரல் எனத் தொடங்கும் பாடலில் ஸ்ரேயா கோஷலின் குரல் காதில் தேன் பாய்ச்சுகிறது. நின்று நிலைக்கப்போகும் மெலடி. தலேர் மெஹந்தி, சாதனா சர்கம், சித்ரா இணைந்து பாடும் பாடலுக்கு தியேட்டரில் ரசிகர்கள் எழுந்து ஆடுவார்கள்.

பேரின்பம் எனத் தொடங்கும் கைலாஷ்கேர், பிரசன்னாவின் பாடல் ரஜினி ரசிகர்களுக்கென்றே ஸ்பெஷலாக போட்டது. ஹரிஹரன், சுஜாதா இணைந்து பாடும் சொல்லாமல் மெலடியும் காதுக்கு இதம்.

கூட்டிக் கழித்தால் டிஸ்டிங்ஷனில் பாஸாகியிருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் என்றே சொல்ல வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil