Publish Date: Sat, 05 Jul 2008 (16:02 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (22:50 IST)
காமெடியை நம்பி இந்திரலோகத்தில் நா. அழகப்பன் வந்ததென்றால் கவர்ச்சியை நம்பி வந்துள்ளது இந்திரலோக இளவரசன். ரீமாசென் காபரே டான்சராக நடித்திருக்கும் படம் இது.
இந்திரலோகத்து ரம்பா, மேனகா, ஊர்வசி மூவரையும் இந்திரனுக்கு தெரியாமல் தள்ளிக்கொண்டு போகிறான் இளவரசன் ஒருவன்.
இந்த முக்கனிகள் போதாது என்று பூலோகம் வந்து காபரே டான்சர் ரீமா சென்னுடன் காதல் புரிகிறான். இளவரசர்களின் ஆசைக்கு அளவேது! கண்ணில் படும் மீரா ஜாஸ்மினையும் மடக்குகிறான் இளவரசன்.
இப்படி மடக்குவதிலேயே இரண்டரை மணி நேரப் படம் ஓடிவிடுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். தெலுங்கில் 32 விழுப்புண்கள் (அதாங்க சென்சார் கட்) பெற்ற பின்பும் அங்கு படம் சூப்பர் ஹிட்.
தமிழில் இதனை இந்திரலோக இளவரசன் என்ற பெயரில் வெளியிட விநியோகதஸ்தர்களுக்குள் தள்ளுமுள்ளு. படத்தில் இளவரசனாக (தெலுங்கு) ஸ்ரீகாந்தும் ரம்பாவாக ரசிகா, மேனகாவாக ஜூலி, ஊர்வசியாக ஜெனிதாவும் நடித்துள்ளனர்.
இந்திரலோக இளவரசன் அல்ல இந்திரலோக மன்மதன்!