அடுத்த அதிரடிக்கு சரண் தயார். உதவியாளர்கள் தொடங்கி இசையமைப்பாளர் வரை எல்லாமே புதுசு. மாற்றம் ஒன்றுதானே மாறாதது என்பவர் மோதி விளையாடு கதையிலும் புதுமை உண்டு என்கிறார்.
முதன் முறையாக முக்கால்வாசி படத்தை கோலாலம்பூர், துபாய், லண்டன் என வெளிநாடுகளில் எடுக்கிறார் சரண். அப்படியானால் கதை?
கல்லூரி மாணவி காஜலுடன் வினய்க்கு மோதலாகி பிறகு காதல் வருகிறது. வழக்கமாக இதுபோன்ற கதையில் கனவுப் பாடலுக்கே வெளிநாடு போவார்கள். ஆனால், மோதி விளையாடு காட்சிகளும் வெளிநாட்டில் படமாகிறது. அது எப்படி?
இந்தியாவின் முதல் பத்து பணக்காரர்களில் ஒருவரின் மகன் வினய். அவருக்கு மோதல் காஜலுடன் மட்டுமல்ல. வேறு பலருடனும் இருக்கிறது. அவர்கள் யார் என்ன வகையான மோதல் என்பது சஸ்பென்ஸ்.
படம் வெளிவந்தால் அனைத்து தரப்பும் கொண்டாடும் என்றார் சரண். கொண்டாடத்தானே இருக்கிறார்கள் ரசிகர்கள்.