Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இளையராஜா - திரும்பிய உற்சாகம்!

இளையராஜா - திரும்பிய உற்சாகம்!
, வெள்ளி, 4 ஜூலை 2008 (19:22 IST)
சங்கிலி முருகன் தயாரித்த படம், காதலுக்கு மரியாதை. இளையராஜா இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட்!

12 ஆண்டுகளுக்குப் பிறகு சங்கிலி முருகன் தயாரிக்கும் படம் அழகர் மலை. இதிலும் இசை இளையராஜா. அரை டஜன் படங்களுக்கு மேல் இளையராஜா மீண்டும் பழைய உற்சாகத்திற்கு திரும்பியுள்ளார்.

ஜகன்மோகினி படப்பிடிப்பிற்கு சென்று தனது பாடல் படமாக்கும் விதத்தை ரசித்தவர். அழகல் மலைக்காக டூயட் பாடலொன்றை பாடியிருக்கிறார். டூயட் பாடுவது இசைஞானிக்கு புதிதல்ல என்றாலும், சில வருடங்களாக அவர் டூயட் பாடுவதை தவிர்த்து வந்தார்.

கடுகமணி கழுத்தில் ஆடுதடி என்ற நா. முத்துக்குமாரின் பாடலை, இந்திப் பாடகி பேலே ஷண்டாவுடன் இணைந்து பாடினார் இளையராஜா.

கேட்க பரவசமாகியிருக்கிறார்கள் ரசிகர்கள்!

Share this Story:

Follow Webdunia tamil