Publish Date: Fri, 04 Jul 2008 (19:13 IST)
Updated Date: Fri, 04 Jul 2008 (19:13 IST)
தென்னிந்திய நடிகைகளில் கோடியை முதலில் தொட்டவர் இலியானா. அவரையே முந்தியிருக்கிறார் நயன்தாரா.
இன்றைய தேதியில் நடிகைகளில் நயன்தாராவுக்கே டிமாண்ட் அதிகம். குசேலன், ஏகன், சத்யம், வில்லு என எல்லாமே முன்னணி படங்கள், முன்னணி நடிகர்கள்.
லிங்குசாமி தயாரித்து இயக்கும் படத்திலும் நயன்தாராவே நாயகி. இவருடன் நடிப்பது கார்த்தி. இந்தத் தகவலை உறதி செய்துகொண்ட லிங்குசாமியின் சகோதரர் போஸ், ஆகஸ்டில் படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிவித்தார்.
அவர் தெரிவித்த, ஆனால் நாம் தெரிந்துகொண்ட விஷயம், நயன்தாராவின் சம்பளம். இந்தப் படத்துக்காக நயன்தாராவுக்கு 1.2 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். தற்போதைய நிலவரப்படி கோடம்பாக்க நடிகைகளில் நயன்தாராவே கோடியில் ஒருவர்!