குசேலன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் படத்தின் நாயகன் பசுபதி, நாயகிகள் மீனா, நயன்தாரா கலந்துகொள்ளவில்லை.
பல்வேறு காஸிப்களுக்கு காரணமாக அமைந்த இந்த புறக்கணிப்பு குறித்து இதுவரை வாய் திறக்கவில்லை பசுபதி. அதேநேரம் புறக்கணிக்கவில்லை, செம பிஸி என வீக்கான காரணம் கூறியிருக்கிறார்கள் மீனாவும், நயன்தாராவும்.
தமிழ்ப் படத்தின் ஷ¥ட்டிங் என்று சொன்னால் தோண்டி துருவுவார்கள் என்று, ஹைதராபாத்தில் கன்னடப் பட ஷூட்டிங்கில் இருந்தேன் என்றார் மீனா.
ஆடியோ வெளியீட்டு தினம் வில்லு, ஏகன் இரண்டு படங்களின் ஷூட்டிங்கும் நடக்கவில்லை. அதே நேரம் சென்னையில்தான் இருந்தார் நயன்தாரா. சல்ஜாப்புக்கு சரியான காரணம் கிடைக்காமல், மாலையில் ஏகன் ஷ¥ட்டிங் தொடங்கினார்கள், அதுதான் வரமுடியலை என்றிருக்கிறார்.
இதற்கு காரணமே சொல்லாமல் இருந்திருக்கலாம் இருவரும்.