கமலின் மர்மயோகி அமிதாப் பச்சனை டென்ஷனாக்கியிருக்கிறது. தென்னை மரத்தில் தேள் கொட்டியதற்கு பனை மரத்தில் நெறி கட்டிய இந்தக் கதை கொஞ்சம் சுவாரஸ்யமானது.
மர்மயோகி இன்னும் தொடங்கவில்லை. நடிப்பது யார் யார் என்பதும் முடிவாகவில்லை. இந்நிலையில் முந்திரிக் கொட்டையாக சில இந்திப் பத்திரிக்கைகள் மர்மயோகியில் அமிதாப் பச்சனும் ரேகாவும் இணைந்து நடிப்பதாக இஷ்டத்துக்கு எழுத, செய்தியை முந்தித்தரும் ஆவேசத்தில், வட இந்திய சானல்களும் இந்தச் செய்தியை பிளாஷ் செய்தனர்.
முன்னாள் காதலியுடன் இணைந்து வந்த இந்தச் செய்தியை அமிதாப் அவ்வளவாக ரசிக்கவில்லை. ரப்பிஷ் என்று திட்டியதோடு, அது என்ன மர்மயோகி, நான் கேள்விப்படாத பெயர் என்று பொரிந்திருக்கிறார்.
ஒரு வேளை கமல் படம் என்று தெரிந்தே கூட டென்ஷனாகியிருக்கலாம் என்கிறார்கள். உண்மை அந்த உயர்ந்த மனிதருக்கு மட்டுமே தெரியும்.