வாயைத் திறந்தால் தலைப்புச் செய்தியாக கொட்டும் தங்கர்பச்சான் கொஞ்ச நாளாக மிஸ்ஸிங். முந்திரிக் காட்டுக்குள் ஒளிந்து கொண்டாரோ என தேடினால், முந்திரிப் பருப்பாக தங்கர் பற்றி பல ஆரோக்கிய தகவல்கள்.
உள்ளது உள்ளபடி எடுக்கும் தங்கர் கைவசம் தற்போது மூன்று படங்கள். மூன்றிற்கும் கதை ரெடி. ஒன்றில் திருமாவளவன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இன்னொன்று நகரம் சார்ந்த கதை. பாய்ஸ் சித்தார்த் தான் இதற்கு பொருத்தம் என நினைத்தவர் இப்போது மாதவன் ஓ.கே. சொன்னால் படத்தை தொடங்கலாம் என மனதை மாற்றியிருக்கிறார். தங்கரின் இன்னொரு சாய்ஸ் பிருத்விராஜ். மூன்றாவதும் முற்றிலும் வித்தியாசமான சப்ஜெக்டாம்.
இந்த மூன்று படங்களையும் ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கிறது. படம் தொடங்கும் முன் தங்கரிடமிருந்து காரசாரமான பேட்டி அல்லது அறிக்கையை எதிர்பார்க்கலாம்.
யானை பின்னே மணியோசை முன்னே என்பதுதான் வழமை!