Publish Date: Thu, 03 Jul 2008 (16:06 IST)
Updated Date: Thu, 03 Jul 2008 (16:05 IST)
ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சுந்தர் சி நடிக்கயிருக்கும் படம் வாடா. தினா இசை. ஸ்கிரீன் ப்ளே எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு.
இந்த மூன்று சேதிகள் தவிர்த்து வாடா குறித்து எதுவும் தெரியாத நிலையில் நான்காவதாக ஒரு செய்தி ஸ்டுடியோ வட்டாரங்களில் உலவுகிறது.
வாடாவில் சுந்தர் சி ஜோடியாக ப்ரியாமணி நடிக்கிறார் என்பதே அந்த சேதி. நாம் விசாரித்ததில், சுந்தர் சி தரப்பிலிருந்து ப்ரியாமணியிடம் பேச்சுவார்த்தை நடத்தியது உண்மை என தெரியவந்தது. அதேநேரம் ப்ரியாமணி பக்கமிருந்து இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை.
இப்போதுதான் பரத்துடன் ஜோடி சேரும் வாய்ப்பு ப்ரியாமணிக்கு வாய்த்துள்ளது. இந்த நேரம் வயதான ஹீரோவுடன் நடிப்பதா என அவர் யோசிக்கிறாராம்.
நிதானமாக யோசிக்க வேண்டிய விஷயம்தான்!