பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த அரசு விதிக்கும் கெடுபிடிகளில் விழி பிதுங்கிப் போகிறார்கள் நம்மூர் சினிமாக்காரர்கள். சத்யம் படத்தில் வரும் விமான நிலைய காட்சிக்கு இந்தியாவின் எந்த ஏர்போர்ட்டும் அனுமதி வழங்கவில்லை. பிறகு துபாயில் அந்தக் காட்சியை எடுத்தார்கள்.
அதேபோல், ரயில் நிலைய காட்சிகளுக்கும் இல்லாத தடையெல்லாம் போடுகிறது அரசாங்கம். இதனால் ஜீவன் நடிப்பதாக இருந்த பயணிகளின் கவனத்திற்கு படமே கைவிடப்பட்டது. இந்தப் படம் எடுக்க வேண்டுமானால் ஒரு மாதத்திற்கு ஒரு ரயில் வாடகைக்கு வேண்டும். ரயிலை இரண்டு நாட்கள் ஷூட்டிங்கிற்கு விடவே யோசிக்கிறது ரயில்வே நிர்வாகம்.
இதே பிரச்சனைதான் படிக்காதவன் படத்திற்கும். சுராஜ் இயக்த்தில் தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தில் ரயில் நிலைய காட்சியொன்று இடம்பெறுகிறது. ரயில்வேயின் கெடுபிடி அறிந்தவர்கள் உஷாராக ரயில் நிலைய அரங்கு ஒன்றை ராமோஜிராவ் ·பிலிம் சிட்டியில் அமைத்திருக்கிறார்கள்.
அரங்கு என்றால் அரசாங்கத்தின் கெடுபிடியும் இல்லை, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டுமே என்ற அடிபிடியும் இல்லை.
படிக்காதவன் புத்திசாலிதான்!