Publish Date: Thu, 03 Jul 2008 (13:33 IST)
Updated Date: Thu, 03 Jul 2008 (13:33 IST)
கமல் படம் என்றால் கலெக்சன் பெயராது என்பது கோடம்பாக்க நம்பிக்கை. அதனை அடித்து நொறுக்கியிருக்கிறது தசாவதாரம். பல இடங்களில் சிவாஜி கலெக்சனை பின்னுக்கத் தள்ளி சாதனையும் படைத்துள்ளது.
வெளிநாடுகளைப் பொறுத்தவரை சிவாஜி படத்தின் கலெக்சனே இதுவரை முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையையும் தசாவதாரம் உடைத்திருக்கிறது.
இரண்டு வார இறுதியில் சிவாஜியின் ஒட்டுமொத்த வெளிநாட்டு வசூல் 3,705,252 டாலர்கள். இதே இரண்டு வார இறுதியில் தசாவதாரத்தின் வசூல் 11,653,212 டாலர்கள். சிவாஜியுடன் ஒப்பிடும்போது 7,947,960 டாலர்கள் அதிகம்.
இனிவரும் நாட்களில் கமல் படம் மேலும் பல கலெக்சன் சாதனைகளைப் புரியும் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.