Publish Date: Wed, 02 Jul 2008 (20:25 IST)
Updated Date: Wed, 02 Jul 2008 (20:24 IST)
குருபார்வை, வானவில் ஜெய்சூர்யா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மனோஜ்குமார். கடைசியாக இவர் மாதவன் நடித்த ஆர்யா திரைப்படத்தை தயாரித்தார்.
ஜெய்சூர்யா படத்திற்குப் பிறகு இயக்கத்திற்கு சிறிய இடைவெளிவிட்ட மனோஜ்குமார், பிரமிட் சாய்மீராவுக்காக ஒரு படம் இயக்குகிறார். லாரன்ஸ் ஹீரோ. படத்துக்கு இசைப் பயணம் என பெயர் வைத்திருந்தனர்.
படையப்பா நீலாம்பரியைப் போல ஒரு வில்லி இந்தப் படத்துக்குத் தேவையாம். ஆள் இளமையாகவும் இருக்க வேண்டும் என்பதால் அப்படியொரு நடிகையை தேடி வருகிறார்கள்.
இசைப் பயணம் என்ற பெயரை அரதபழசாக ஒலிப்பதால் படத்தின் பெயரை சுருக்கமாக கானா என்று மாற்றியுள்ளனர்.