நேற்று சென்னை ஃபோர் ஃபிரேம் திரையரங்கில் நிலைகொள்ளாத கூட்டம். முதல்வர் தொடங்கி மனோரமா வரை எங்கெங்கிலும் பிரபலங்கள். முதல்வரின் கதை, வசனத்தில் உருவான உளியின் ஓசை திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்குதான் இத்தனை கூட்டமும்.
முதல்வர் கருணாநிதி எழுதிய சாரப்பள்ளம் சாமுண்டி சரித்திர கதையை இளவேனில் உளியின் ஓசை திரைப்படமாக இயக்கியிருக்கிறார். வரும் 4 ஆம் தேதி படம் ரிலீஸ். நேற்று அதன் சிறப்புக் காட்சி.
முதல்வர் தனது துணைவி, மகள், மகன்கள் மற்றும் தனது அமைச்சரவை சகாக்களுடன் படத்தைக் காணவந்தார். கமல், ரஜினி, பாரதிராஜா, சத்யராஜ், பாக்யராஜ், மனோரமா உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்களுடன் முதல்வருடன் அமர்ந்து படம் பார்த்தனர்.
சில வாரங்கள் முன்பு முழுமையடையாத படத்தைப் பார்த்த முதல்வர், எனது கதையை சிறந்த முறையில் திரையில் கொண்டு வந்தது இளவேனில்தான் என பாராட்டியது குறிப்பிடத்தக்கது.