போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டிற்கு இன்ச் டேப்பும், இஞ்சிமரப்பா முகமுமாக சிலர் சென்றிருக்கிறார்கள். வருவாய்த் துறை ஊழியர்கள் என்று காவலுக்கு நின்ற செக்யூரிட்டிகளிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள், வீட்டை அளக்க வேண்டும் என்றிருக்கிறார்கள்.
சும்மா தமாஷ் பண்றாங்க என்றுதான் முதலில் செக்யூரிட்டிகள் நினைத்திருக்கிறார்கள். ஆனால், இன்ச் டேப் ஆசாமிகள், அதிகார குரலில் மிரட்டவே, செய்தியை வீட்டிற்கு தெரியப் படுத்தியிருக்கிறார்கள்.
அடுத்த ஐந்தாவது நிமிடம், உயர் மட்டத்திலிருந்து இன்ச் டேப் ஆசாமிகளுக்கு ·போன் வந்திருக்கிறது. அவ்வளவுதான்! அதுவரை ஆறடி உயரத்தில் அதிகாரம் செய்தவர்கள் அரையடியாக குனிந்து, தவறுக்கு வருந்துகிறோம் என சலாம் வைத்து இடத்தை காலி செய்துள்ளனர்.
வருவாய்த் துறை ஊழியர்கள் அவ்வப்போது சர்வே எடுப்பது உண்டாம். ஆனால் யார் யாரை எடுப்பது என்ற 'ஜனநாயக' நடைமுறை தெரியாமல் வாமனர் தலையிலேயே கால்வைக்க முயன்றதால்தான் இத்தனை அமர்க்களமும்.