ஜூலை முதல் வாரத்தில் சென்னை ஏவி.எம். ஸ்டுடியோவில் ராதாமோகனின் அபியும் நானும் படப்பிடிப்பு. இதில் த்ரிஷா கலந்துகொள்கிறார்.
அப்பா மகள் உறவை சொல்லும் இப்படத்தில் அப்பாவாக பிரகாஷ் ராஜும், மகளாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பிரகாஷ்ராஜின் மனைவியாக நடிப்பவர் ஐஸ்வர்யா. டூயட் மூவிசுடன் இணைந்து மோசர் பேர் நிறுவனம் தயாரிக்கிறது.
கேரளாவில் தொடங்கிய அபியும் நானும் படத்தின் பாக்கி போர்ஷன் முடிந்துவிட்டது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி.
போஸ்ட் புரொடக்சன் வேலைகளுக்காக சென்னையில் தங்கியிருக்கும் ராதாமோகன், ஜூலை முதல் வாரத்தில் ஏவி.எம். ஸ்டுடியோவில் பாடல் காட்சி ஒன்றை ஷூட் செய்கிறார். சென்னையில் ஒரு மழைக்காலம் ஷூட்டிங்கில் இருக்கும் த்ரிஷா இதில் கலந்து கொள்கிறார்.
அபியும் நானும் ஆகஸ்டில் திரைக்கு வருகிறது.